Friday, July 1, 2011

பன்னீர்ப்பூக்களும் நானும்

புத்தகங்களை அணைத்தபடி
அந்த பன்னீர் மரத்தடியில்
நீ  பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்த போது 
என் காதலை சொன்னேன்...
போவத்ற்கு முன் அவசரமாய் நீ வீசிய பார்வை
மொழிபெயற்க இயலாது
அங்கேயே உறைந்து விட்டது...
உன் அடுத்த வருகைக்காய் 
அங்கு உதிர்ந்து கிடக்கும்
பன்னீர்ப்பூக்களும் நானும்...

Labels: ,

Sunday, June 26, 2011

வாசல்

                   னம் நனைக்கும் சாரல்களாய் அவ்வபோது விழும் வரிகளை சேகரிப்பது  குளிர் கால நெடுஞ்சாலை பயணத்தின்  சாலையோர தேநீர்  அனுபவமாய் இருக்கிறது. அவற்றை கவிதைகளாய் வகைபடுத்த இயலாவிட்டாலும்,  இன்றைய அலைபேசி யுகத்தின் பரிணாம மாற்றத்தில் அவை குறுங்கவிதைகளாய் உருப்பெறும் என நம்புகிறேன். அலைபேசியில் குறுந்தகவலாய் அனுப்புவதற்காகவே எழுதப்பட்டதால் இப்பெயர் பொருந்தும் என நம்புகிறேன். இனி அவ்வபோது வெளியாகும் குறுங்கவிதைகள் மீதான கருத்துப் பகிர்தலை எதிர்பார்க்கிறேன்.

Read more »